வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட நொச்சி மரம் இப்படி உதவுமா??
நொச்சி மிகச் சிறந்த ஒரு மூலிகை தாவரமாகும்.மக்களால் பெரும்பாலும் வீடுகளில் இம்மரம் வளர்க்கப்படுகின்றது. நச்சு மரம் பெரும்பாலும் உயரம் குறைவாகவே காணப்படும்.
இந்த மூலிகை மரத்தை ஆடு, மாடுகள் போன்ற விலங்குகள் நெருங்காது. அதனால், இது வயல்வெளிகளிலும் வேலியின் ஓரங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த இலைக்கு பூச்சியைத் தடுக்கும் திறன் இருக்கிறது. அதனால் தானியங்களை சேமித்து வைக்கும் பொழுது நொச்சி இலைகளையும் சேர்த்து மூடி வைத்தால் பாதிப்புகள் ஏற்படாது.
நொச்சி இலையை நீரில் கொதிக்க வைத்து ஆவி (வேது பிடித்தல்) பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி இருமல், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
நொச்சி இலையுடன் மிளகு பூண்டு, கிராம்பு சேர்த்து உண்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
மேலும் தலைவலி சரியாக நொச்சி இலையை சுக்கு உடன் சேர்த்து அரைத்து நெற்றி, கன்னம் போன்ற இடங்களில் பற்றுப் போட்டு வந்தால், வலி, வீக்கம் போன்றவற்றிக்கு தீர்வு கிடைக்கும்.
வீட்டில் உள்ள கொசுவை விரட்ட நாம் என்னென்னவோ மருந்துகள் செய்தும் அவை பலனளிப்பதில்லை. ஆனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை இருக்கலாம்.எனவே இதை மாற்று நிவாரணியாகப் பயன்படுத்தலாம். காய்ந்த அல்லது பச்சையாக உள்ள நொச்சி இலைகளை தீயில் எரித்து புகை போட்டு வந்தால் கொசுக்கள் விலகும். படுக்கை அறையில் நொச்சி இலைகளை வைத்தாலும் கொசுக்கள் நெருங்காது. நொச்சி, வேப்பிலை போன்றவற்றை புகை மூட்டம் போடுவதாலும் கொசுத் தொல்லைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். .