தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாமா ?

 மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவுப் பொருள் தான் நெல்லிக்காய்.

இந்த பதிவில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும்  தினமும் குடிக்கலாமா ? வேண்டாமா ? என்பதை பற்றிப்  பார்க்கலாம்.


1. உடல் பருமன் குறையும்.

 நெல்லிக்காயை ஜூஸ் செய்து குடித்தால் உடலில் உள்ள புரோட்டின் அளவை அதிகரித்து கொழுப்புக்களை குறைக்கும் . எனவே உங்களுடைய உடல் எடையை குறைக்கும் தன்மை இந்த நெல்லிக்காய் ஜூஸ் -க்கு  உண்டு.

2. கண்களுக்கு பாதுகாப்பு.

கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிலும் குறிப்பாக கண்புரை , கண் எரிச்சல், கண்களில் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் நல்லது.


3. உடல் சூடு தணியும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் . குறிப்பாக கோடைக்காலங்களில் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் உடல் சூடு தணியும் .

4. இரைப்பை கோளாறுகள் தீரும்.

வாரம் ஒருமுறையென தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸை குடித்து வர இரைப்பை கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் போன்றவை குணமாகும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் .


5. இதயம் வலிமை பெறும்.

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் உள்ள டாக்ஸின்கள் அதாவது நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும்,  உடலையும் இரத்தத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் . மேலும் இதயத் தமனிகளில் உள்ள அடைப்பை நீக்கும், இதயத் தசைகளை வலிமையாக்கும் .


6. எலும்புகள் ஆரோக்கியமாகும் .

உடலில் உள்ள எலும்புகளை வலிமையுடன் வைத்துக் கொள்ளும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு அதுமட்டுமல்லாமல் எலும்புகளை எளிதில் உடைய செய்யாமல் திடமாக வைத்துக் கொள்ள உதவும்.


● இவ்வளவு நன்மைகளை நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தாலும் தினமும் குடிக்கலாமா என்று மருத்துவர்களிடம் கேட்டால் வேண்டாம் என்று தான் கூறுவார்கள் . காரணம் நாம் ஜூஸாக சாப்பிடும் போது நெல்லிக்காயின் அளவு அதிகரிக்கும்.  பொதுவாக நம் உடம்புக்கு வைட்டமின் சி குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் இந்த ஜூஸில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நெஞ்செரிச்சல்,  அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


● இதய பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இந்த ஜூஸை குடிக்க வேண்டாம் காரணம் , தலை சுற்று மயக்கம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.


● எனவே அனைவரும் நெல்லிக்காய் ஜூஸை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் குடித்து அதன் பலனை முழுவதுமாக பெற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

Post a Comment

Previous Post Next Post

Ads

نموذج الاتصال